Header Ads



யாழில் துப்பாக்கிச்சூடு இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் அழகொள்ளை பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய சஞ்சீவ் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை யாழ் மாவட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகோரா உறுதிப்படுத்தினார். இனந்தெரியாத இளைஞர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த இளைஞன் படுகாயமடைந்திருப்பதாகவும், அவர் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.