கோலாவும், பலஸ்தீன குருதியும்
கோலா
குடிக்கும் போது
கொழுந்து விட்டெரியும் பலஸ்தீனத்தின்
மார்பிலிருந்து பீரிட்டுப் பாயும்
குருதி வெள்ளம் இன்னும்
நினைவுக்கு வந்து உன் நெஞ்சை
நெருடவில்லையா?
உன்பெயர்
உச்சரிக்கையிலேயுன் உம்மாவின்
உயிர் குடிக்க பென்டகனிலிருந்து
புறப்படும் பேய்களின்
கோரப்பற்கள் காட்சி தரவில்லையா?
கண்களுக்குள்?
பானமதை சுவைக்கையில்
ஸெரோனின் செத்து மடிந்த சேனைகள்
தொழுகை தந்த பூமியை
தொழுவமாக்கிய செய்தி உன்
இதயத்தில் ஈட்டியாய்க்
குத்தவில்லையா?
பானத்திற்கு நீ
காசுகொடுக்க, மிஹ்ராஜ் பூமியில்
மிருகங்கள் நிலை கொள்வதை எண்ணி
எப்போதாவதுன்
உள்ளக் கிடக்கைக்குள் போர் முரசம்
ஒலித்திருக்கிறதா?
சியோனிஸ முற்செடிக்கு நிரூற்ற
நீயருந்தும் பானத்தின் ஒவ்வொரு மிடரும்
என் சகோதரனின்
இரத்தத் துளியென்பதை
உன் உணர்வுகளுக்கு
புலப்படுத்துவதெப்போது?
நீ தாகம் தீர்க்க
என்
பலஸ்தீனத் தாயின்
கண்ணீர்தான் கிடைத்ததா...?







Post a Comment