Header Ads



பணம் வசூலிக்கும் தென்னிலங்கையர் தொடர்பாக யாழ். மக்கள் புகார்

யாழ்ப்பாணத்தில் தாம் நடத்தும் சிறுவர் இல்லங்களுக்கு நிதியுதவி செய்யுமாறு  ஆவணங்களுடன் வீடு வீடாகசென்று பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கை மக்கள் சிலர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெண்களும் அடங்கியிருப்பதாக யாழ்நகர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வருபவர்கள் வீட்டில் தனிமையாக இருக்கும் பெண்களை அச்சுறுத்தி இருபதினாயிரம் ரூபாவை கோருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடுகளுக்குள் செல்பவர்களுள் தொல்லைதாங்க முடியாமல் ஆயிரம் ரூபா வரை கொடுப்பதாகவும் அவற்றுக்கு பற்றுச்சீட்டை அவர்கள் கொடுத்துச் சென்றமையும் அவதானிக்கப்படுகின்றது.இத் தொல்லை காரணமாக மக்கள் வீடுகளின் கேற்றை பகல் வேளைகளில் பூட்டி வைத்து விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.