Header Ads



கட்டாரில் பலியான மூவரின் உடல்கள் விரைவில் இலங்கைக்கு

கட்டாரில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்த மூன்று இலங்கையர்களின் சடலங்களை நாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த மூன்று இலங்கையர்கள் கடந்த 15ம் திகதி இரவு கட்டாரில் விபத்துக்குள்ளாகினர்.

குறித்த மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த தம்பதியினரும், மேலுமொருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தம்பதியர் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மற்றைய நபர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவராவார்.

மோட்டார் வாகனத்தில் சென்ற மற்றுமொரு இலங்கைப் பெண் விபத்தில் காயமடைந்துள்ளார். களியாட்ட நிகழ்வொன்றை பார்வையிடச் சென்ற வேளையிலேயே இவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.