Header Ads



நாளை புதிய அமைச்சரவை, மாற்றங்களும் உண்டாம்


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய அமைச்சரவை நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான வைபவம் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் புதிய பதவிக்காலத்தின் கீழ் செயற்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நாளை பதவியேற்கவுள்ளனர். தற்போதுள்ள அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை புதிய அமைச்சரவை, மாற்றங்களும் உண்டாம்

No comments

Powered by Blogger.