Header Ads



யாழ் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சிங்களவர் நாவற்குழியில் குடியேறினர்

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறும் பொருட்டு யாழ் ரயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களாக தங்கியிருந்த 67 சிங்கள குடும்பங்கள் நேற்று செவ்வாய்கிழமை இரவு முதல்  நாவற்குழி பகுதியிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய  காணிகளில் குடியேறியுள்ளனர்.

பொலித்தீனினால் கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள அச்சிங்கள குடும்பங்கள் தாம் தமிழ் மக்களுடன் ஒற்றுமையாக வாழ விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதயீலு; இச்சிங்கள குடும்பங்கள் தாம் யாழ் கொழும்புத் துறையில் வாழ்ந்து வந்ததாக முன்னர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.