Header Ads



பாணும் பயங்கரவாதமும்

பாண் மற்றும் கோதுமைமா உற்பத்திகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் விளைவாக 2000 பேக்கரி உரிமையாளர்கள் தொழில் இழந்திருக்கிறார்கள் என கடந்த செவ்வாயன்று தொழில்துறை அமைப்பொன்று கூறியிருக்கிறது.

இவ்வாறு ஏ.எப்.பி. யின் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கின்றது. அச்செய்தியின் மொழியாக்கம் கீழ்வருமாறு.

உயர் வரி மற்றும் கோதுமைமா உற்பத்திகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவரும் முனைப்புக்களின் விளைவாக இலங்கைத்தீவிலிருந்த மொத்த பேக்கரி உரிமையாளர்களில் கால் பகுதிக்கும் அதிகமானவர்கள் பேக்கரிகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  கூறியிருக்கிறது.

'பாண் பயன்பாட்டுக்கு எதிரான பரப்புரைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது. பாணை உண்ணுவது பயங்கரவாதத்திற்கு ஒப்பான செயலாம் என அரச அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார்' என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜெயவர்த்தன கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பேக்கரி உற்பத்திப்பொருட்களுக்கான இறக்குமதி வரியினை இரண்டு தடவைகள் அதிகரித்திருக்கும் அரசாங்கம் இலங்கைத் தீவின் பாரம்பரிய உணவான அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளையே மக்கள் பயன்படுத்தவேண்டும் என ஊக்குதலளித்து வருகிறது.

பாண் மற்றும் ஏனைய கோதுமை மா உற்பத்திகள் கோதுமை மா உற்பத்தியான பாணை விட அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானது என கொழும்பு வாதிட்டு வருகிறது.

அரச மருத்துவமனைகள் சிறைச்சாலைகள் மற்றும் பாடசாலைகளின் கோதுமை மா உற்பத்திகள் விநியோகிக்கப்படக்கூடாது எனவும் கொழும்பு கூறியிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கடந்த ஆண்டு 250 மில்லியன் டொலர் பெறுமதியான கோதுமை மாவினை இறக்குமதி செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கோதுமை மா பயன்பாட்டுக்கு எதிரான உத்தியோகபூர்வத் தடையேதும் இதுவரை விதிக்கப்படவில்லை எனக் கூறும் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கோதுமை மாவின் அதிக விலைஇ கோதுமையினைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் அரிசிப் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டிய தேவை தொடர்பில் அதிகாரிகள் கருத்திலெடுப்பதாகக் கூறுகிறார்.

எது எவ்வாறிருப்பினும் கோதுமை மா உற்பத்தித் தொழில்துறையிலுள்ள ஆயிரக்கணக்கான வேலையினைப் பாதுகாக்கும் வகையில் அரச அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணத்தினை மாற்றும் முனைப்புக்களில் வெதுப்பக உரிமையார்கள் ஈடுபட்டிருப்பதாக ஜெயவர்த்தன கூறுகிறார்.

'அரிசி மாவினைப் பயன்படுத்தி நாம் பாண் தயாரிக்கலாம் தான். ஆனால் தற்போது கிடைக்கப்பெறும் அரிசிமா தரமில்லாதுள்ளது. அரிசியினைச் சமைப்பதை விட இன்றைய உலகில் பேக்கரி உற்பத்திகளையே மக்கள் பெரிதும் வரும்பி வாங்குகிறார்கள்' எனவும் சங்கத்தின் தலைவர் ஜயவர்த்தன தொடர்ந்து தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.