Header Ads



மாணவர்கள் வீதிக்கு வந்தனர் பிரிட்டன் வீதிகள் அதிர்ந்தன

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மாணவர்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று புதன்கிழமை மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக பிரிட்டன் வீதிகள் கொதிநிலையில் காணப்பட்டதாக சர்வதேச ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளிட்டுள்ளன.

இதன்போது பிரித்தானிய கான்சர்வேட்டிவ் தலைமைச் செயலகம் அடித்து நொருக்கப்பட்டதோடு சில இடங்களையும் மாணவர்கள் தீயிட்டுக் கொழுத்தியும் உள்ளனர். சமீபத்தில் கான்சர்வேட்டிவ் கட்சி பல புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. அதில் மாணவர்களுக்கு கடன் வழங்குவதை ரத்துச்செய்தும் படிப்பிற்காக கட்டணத் தொகையை உயர்த்தியும் இருந்தது.

இந் நிலையில் இன்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கலாக பல ஆயிரம் பேர் அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தடுக்க முற்பட்ட பிரித்தானியப் பொலிசார் சிலர் மாணவர்களைத் தாக்கியதால் கலவரம் வெடித்தது. அதில் பல மாணவர்கள் காயமடைந்ததால் மேலும் ஆத்திரமடைந்த மாணவர்கள் கான்சர்வேட்டில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர். கலகம் அடக்கும் பொலிசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக இவ்வாறானதொரு கலகம் பிரித்தானியாவில் இடம்பெறவில்லை என்றும் பெரும் மாணவப் புரட்சி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் சிலர் எதிர்வு கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.