Header Ads



அவுஸ்ரேலியாவில் தஞ்சம் நிராகரிக்கப்படின் 4000 ஆயிரம் டொலர் நிதியுதவி

அவுஸ்ரேலியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் மீளவும் தமது நாட்டுக்குத் திரும்பி தொழில் வாய்ப்பைத் தேடிக்கொள்வதற்கு வசதியாக நாலாயிரம் டொலர் நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிககளை சுயமாக நாடு திரும்புவதற்கு ஊக்விக்கும் நோக்கிலேயே அவுஸ்ரேலிய அரசாங்கம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இதற்கென அவுஸ்ரேலிய அரசாங்கம் 5 மில்லியன் டொலரை வருடாந்தம் ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.

நிரப்பிவழியும் அகதிகளுக்கான தடுப்பு முகாம்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை அகதிகள் நேரடியாகப் பெறமுடியாது என்று அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்தார்.

இந்த நிதி புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனம் ஊடாக தொழிற்பயிற்சிஇ வேலைவாய்ப்பு அல்லது சிறுதொழில் முயற்சியை ஆரம்பிக்க உதவியாக வழங்கப்படும்.

தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் சுயமாக நாடு திரும்புவதை ஊக்குவிக்கவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.