கர்ப்ப யானைக்கு ஸ்கேன் பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி
தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் ஸ்கேன் படத்தை அனைவரும் பார்த்திருப்போம். லண்டனில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள யானை ஒன்று கர்ப்பமாக இருந்த போது 19 வது மாதத்தில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மக்கள் அனைவரும் யானை கருவாக இருந்த போது எடுக்கப்பட்ட ஸ்கேன் படத்தை பார்த்து வியந்து வருகின்றனர். தற்போது 22 மாதங்கள் முடிவு பெற்று இந்த யானைக் குட்டி தாயின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டும் விட்டது. புதிய யானைக் குட்டிக்கு ஜார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஜார்ஜ் என்ற இந்த புதிய யானைக்குட்டி அதன் தாய் கரிஹ்மாவின் வயிற்றில் கருவாக இருந்த போது மனிதர்களுக்கு நடைபெறுவதைப் போன்றே அனைத்து சோதனைகளும் மருத்துவர் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதியாக அது குட்டியை ஈன்ற போது நடைபெற்ற சிகிச்சையும் படமாக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் புதிய குட்டி பிறந்த பின்னர் குளிப்பாட்டுதல் உள்ளிட்ட அனைத்தும் படமாகக்ப்பட்டுள்ளன. தற்போது 6 மாதமாகும் ஜார்ஜ் தொடர்ந்தும் சிறப்பாக கவனிக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளான். இந்த படங்களை மிருகக்காட்சி சாலை நிர்வாகம் இன்று செவ்வாய்கிழமை இரவு நேயர்களுக்கு காண்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.

Post a Comment