வவுனியா வளாக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை முதல் வகுப்புப் பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.முதலாம் ஆண்டுக்காக அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய மாணவர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் போதுமான முறையில் செய்து கொடுக்கப்படவில்லை என்பதற்காகவே அனைத்து மாணவர்களும் இணைந்து வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அத்துடன் பிரயோக விஞ்ஞான பீடம் தற்போதைக்கு போதுமான வசதிகள் அற்ற தற்காலிக கட்டிடத்திலேயே இயங்கி வருவதாகவும் மாணவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
Post a Comment