பாடசாலை வான் சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வானுக்காக விசேட அனுமதிப் பத்திரமொன்றை அறிமுகப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
பாடசாலை வானுக்குள் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
அண்மையில் 3 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்இ அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்இ அவர் குறிப்பிட்டார். பாடசாலை வான்களில் சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தப்படுவது தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அனோமா திஸாநாயக்க கூறினார்.

Post a Comment