Header Ads



யாழ் முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் சுயமாக மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டுமென யாழ் முஸ்லிம் அமைப்புக்கள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்வின்போதே யாழ் முஸ்லிம் அமைப்புக்களின் கோரிக்கையடங்கிய மகஜரை அமைப்பின் செயலாளர் எம்.கே. சர்மிளா அரச அதிபரிடம் கையளித்தார்.

அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

தற்போது யாழில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் தொழில் மற்றும் காணி பிரச்சினைகளை திர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், யாழ்ப்பாணத்தில் இன நல்லிணக்கம் மேலோங்க அர்ப்பணிப்புடன் செயற்பட தயாரெனவும் அதில் மெலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகஜரின் பிரதிகள் யாழ் மேயர் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகளுக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.