Header Ads



யாழ் முஸ்லிம் பகுதிகள் அபிவிருத்தியடையுமா?

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 909 மில்லியன் ரூபா கட்டுநிதி கிடைத்திருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுகுமார் இமெல்டா தெரிவித்துள்ள அதேவேளை யாழ் முஸ்லிம் பகுதிகளும் சமகாலத்தில் அபிவிருத்தி செய்யப்படுமாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

யாழ். செயலகத்தில் இடம்பெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித அபிவிருத்தித் திட்டத்தின் செயல்பாடுகள் மீள் பரிசீலனை செய்யும் மாதாந்த கூட்டத்தில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்நிதியில் குடாநாட்டில் 64 வீதிகளை அபிவிருத்தி செய்ய 379 மில்லியன் ரூபாவும் 11 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை புனரமைக்க 26 மில்லியன் ரூபாவும் 12 பொதுக் கட்டடங்களை புனரமைக்க 203 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன.

இதேவேளையில்இ யாழ். மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் நடவடிக்கைக்கு 250 மில்லியன் ரூபாவும் பதினாறு பாடசாலை களில் மேலதிக வளங்களை மேம்படுத்த 34 மில்லியன் ரூபாவும் நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு 15 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட திட்டங்களில் முதன்மையான வேலைகள் பிரதேச செயலக ங்கள்இ பிரதேசசபைகள் கல்வித் திணைக் களம் நீர்ப்பாசன திணைக்களம் நீர்வழங் கல் மற்றும் வடிகாலமைப்புசபை யாழ். செயலகம் ஆகியவற்றால் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. கேள்விகள் கோரப்பட்டு வேலைகள் தனியார் ஒப்பந்தகாரர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.