Header Ads



யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தமிழ் மக்கள் கண்டிக்கவில்லை


20 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்கள் யாழ் குடாநாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டபோது சாதாரண மக்கள் பலர் அதனை கண்டிக்கத் தவறிவிட்டதாக  பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

யாழில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரே இவ்வாறு கவலை வெளியிட்டதாக பி..பி.சி. ஆங்கல சேவையின் நிருபர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த நிருபர் யார் அந்த பேராசிரியர் என்று குறிப்பிடவில்லை.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டபின்னர் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் கடந்த கால கசப்புணர்வுகளுக்கான காரணங்கள்
அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு அமைக்கப்படுவதாகக் கூறி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வட பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் விசாரணைகளை நடத்தி முடித்துள்ளது.

வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா நாட்டின் முக்கிய பகுதிகள் என கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த விசாரணைகளின் போதுஇ இடம்பெயர்ந்தவர்கள் உள்ளடங்கலாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்துகொண்டு சாட்சியமளித்துள்ளனர்

No comments

Powered by Blogger.