முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான சம்பளம் முன்கூட்டியே வழங்குமாறு கோரிக்கை
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான நவம்பர் மாதச் சம்பளத்தை 15 ஆம் திகதியே வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேடமாக ஆசிரியர்களுக்கான நவம்பர் மாத சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இரத்தினபுரி மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிஇ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக முன்னணியின் அமைப்பாளர் எம்.ஜே.எம்.மாலிக்ஷா தெரிவித்தார்.
எதிர்வரும் 20 ஆம் திகதியே சம்பளம் வழங்கப்படவுள்ளது. ஆனால் அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் 22 ஆம் திகதியே சம்பளப் பணத்தை பெறக் கூடியதாக உள்ளதாகவும் இதனால், பெருநாளை கொண்டாடுவதில் முஸ்லிம் அரச ஊழியர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாக வேண்டி வருமெனவும் அவ்வேண்டுகோளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Post a Comment