Header Ads



வடக்கு முஸ்லிம்களின் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதீதி

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 20 வருட ஞாபகார்த்த நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதீதியாக கலந்து கொள்வதுடன், அமெரிக்க, இந்திய, ஈரான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் சிறப்பு அதீதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் வடக்கலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் கலாசார நிகழ்ச்சியும், முஸ்லிம்கள் தொடர்பான வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.