Header Ads



இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் காணிகள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் காணிகள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை

மன்னார் நகரில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பு மற்றும் தென்பகுதி மாவட்டங்களில் வசிப்போரின் காணிகளை போலி ஆவணங்கள் மூலம் மோசடிக் கும்பலொன்று விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 90 ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாக பல முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலருக்குச் சொந்தமான பெறுமதியான காணிகளை போலி ஆவணங்களைத் தயார்படுத்தி மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதில் மோசடிக் கும்பலொன்று ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வெற்றுக்காணிகள் எழுத்தூர் பகுதியில் கழலன்கோட்டை எனும் இடத்தில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் கொண்ட விஸ்தீரணமுடைய பனம் மரங்களைக் கொண்ட காணிகள் தலைமன்னார் புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள காணிகள் ஆகியவற்றையே இக்கும்பல் மோசடியான முறையில் போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 மேலும்இ மன்னார் நகரில் பராமரிப்பின்றிக் கிடக்கும் சிறிய காணித் துண்டுகளையும் இவர்கள் தம்வசப்படுத்த முயல்வதாகவும் இந்தக் காணிகளின் உரிமையாளர்கள் பலர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நிலையில் அவர்களுக்கு தெரியாதெனவும் கூறப்படுகிறது

No comments

Powered by Blogger.