Header Ads



யாழ்ப்பாணத்தில் வாழும் 105 வயது முதியவர்

யாழ்ப்பாணத்தில் வாழும் அதிக வயது கூடிய மனிதருக்கு வயது 105. இவரின் பெயர் வீரகத்தி. வேலணையில் வசிக்கின்றார். 10 வயதில் காலிக்கு தொழில் தேடிப் போய் கடை வைத்து இருந்தார்.

1920 திரும்பி வந்து வேலணையில் புகையிலைத் தோட்டம் செய்தார். 1930 கலியாணம் முடித்தார். 08 ஆண் பிள்ளைகள். 04 பெண் பிள்ளைகள். 03 ஆண் பிள்ளைகள் பிறந்தவுடன் மனைவி ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று கந்தசட்டி விரதம் இருந்தமையை நினைவு கூருகின்றார்.

இவர்களில் ஆண் பிள்ளைகள் 06 பேர் இறந்து விட்டனர். பனையால் இறக்கிய உடன் கள்ளை குடித்தால் அமுதம் போல் இருக்கும் என்கிறார் இவர். இப்போதும் சாராயம் குடிப்பார் என்கிறார்.

இவரின் அண்மைய உணவுப் பழக்கம் பற்றி இப்படிக் கூறுகின்றார்.

காலையில் 5.00 மணிக்கு பால் தேநீர். காலை 9.00 மணிக்கு தேநீர். காலை 10.00 மணிக்கு மெல்லிய சாப்பாடு. மதியம் 1.00 மணிக்கு மதியச் சாப்பாடு. பின்னேரம் தேநீர். இரவு பிட்டு அல்லது இடியப்பம் அல்லது தோசை. இறைச்சி சாப்பிடுவேன். கணவாய்இ நண்டு கூழ் குடிப்பேன்.  தின்னுவேன்

அந்த காலத்து நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.  75 சதத்துக்கு ஒரு பரப்பு காணி வாங்கினேன். இப்போது அதன் விலை 25 ஆயிரம் ரூபாய். இரண்டரைச் சதத்துக்கு வாங்கிய முட்டை இருபது ரூபாய். நெல்லு நான்கு சதம்.

முத்துச் சம்பா அரிசி பத்துச் சதம். சீரகச் சம்பா அரிசி ஒன்பது சதம். பச்சை அரிசி எட்டுச் சதம். பாவம் செய்தவர்கள்தான் நீண்ட காலம் வாழ்கின்றார்கள் என்று சிலர் கூறுகின்றார்கள்.

புண்ணியம் செய்தவர்கள்தான் நீண்ட காலம் வாழ்கின்றார்கள் என்று சிலர் கூறுகின்றார்கள். எனக்கு எது உண்மை என்று தெரியாது.

ஆனால் என் மனைவி பிள்ளைகள் மிகவும் நன்றாகவே பார்க்கின்றார்கள். எனக்கு ஒரு குறையும் இல்லை. மிகவும் சந்தோசமாகவே உள்ளேன். இப்படிக் கூறுகின்றார் வீரகத்தி.

No comments

Powered by Blogger.