யாழ்ப பல்கலைக்கழகத்தில் விரைவில் அழகியல் பீடம் தனித்து நிறுவப்படும் அமைச்சர் எஸ்.பி. தெரிவிப்பு
யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 17ஆவது உலக மாணவர் இளைஞர் விழாவை முன்னிட்டு நடைபெற்ற முன்னோடி கலந்துரையாடலில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த போரினால் மக்கள் உயிர்களையும்இ உடமைகளையும்இ உடல் உறுப்புக்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ள அந்த அனர்த்தத்திற்கு நாம் யாவரும் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இப்போது போர் நிறுத்தப்பட்டு அமைதிச் சூழல் நிலவும் இந்நிலையில் வடபகுதி மாணவர்களுடன் இலங்கையில் வாழும் மக்கள் இன மத என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைய வேண்டுமென்பதும் எமது விருப்பமாகும்.
உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பல்கலைக்கழங்களின் கல்வித் தரத்திற்கு மேலாக இலங்கைப் பல்கலைக்கழக கல்வித் தரத்தை கொண்டு வருவதற்காக ஜப்பான் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களை நடாத்தி வரும் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி மாணவர்கள் எதிர்காலத்தில் ஆற்றலுள்ள சமூகமாக மிளிர வேண்டும்.
இந்த நாடு தனியே சிங்கள நாடென்று ஒருபோதும் கூற முடியாது தமிழர்இ சிங்களவர் முஸ்லிம் மலாயர் பறங்கியர் என எல்லோருக்கும் உரிய நாடு என்றும் இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் எல்லா மொழிகளையும் கற்க வேண்டும். எமக்குள் இருக்கின்ற மொழி மதம் இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து சகோதரத்துவத்துடன்இ புதியதொரு உலகை நோக்கிப் பயணிப்போம் என்று தெரிவித்த அமைச்சர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரைவில் அழகியல் பீடம் தனித்து நிறுவப்படும் அதேவேளை அதன்மூலம் மாணவர்கள் தமது உயர் கல்வியை மேற்கொள்ள முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
அத்துடன் வெகுவிரைவில் இரு விடுதிகளை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment