Header Ads



லண்டன் தொடர்மாடி தீ விபத்தில் இலங்கை முஸ்லிம் இளைஞன் பலி

லண்டனில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் அண்மையில் இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கையைச் சேர்ந்த அப்துல் அஸீஸ் பௌசுல் இஹ்சான் வபாத்தாகியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விளைஞன் தங்கியிருந்த தொடர்மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக 2 ஆம் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த இவ்விளைஞர் மூச்சுத்திணரலுக்குள்ளாகி வபாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

வபாத்தான இளைஞனின் சகோதரி மற்றும் குடும்பத்தவர்கள் குறித்த கட்டிடத்தின் கீழ் மாடியில் குடியிருந்த நிலையில் அவர்களும் இவ்விபத்தில் தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை வபாதடதான இளைஞனிள் ஜனஸா நல்லடக்கம் நேற்று புதன்கிழமை இலண்டனில் நடைபெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.