Header Ads



உலகில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது மௌலவி அப்துல் ஹாலிக் தெரிவிப்பு

இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிற போதிலும்  உலகில் இஸ்லாம் மிகவேகமாக பரவி வருவதாக மௌலவி அப்துல் ஹாலிக் தெரிவித்தார்.

சுவிஸின் சூரிச் நகரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மௌலவி அப்துல் ஹாலிக் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

இஸ்லாம் அழகிய வாழ்க்கைத் திட்டமாகும். எனினும் முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற குறைபாடுகள் காரணமாக இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்தியிலும் இஸ்லாம் மிக வேகமாக உலகெங்கும் பரவிவருகிறது. குறிப்பாக நியூயேர்க் நகரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் அதிகளவிலானவர்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏராளமான முஸ்லிம்கள் இஸ்லாம் விரும்பும்படி தமது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாம் விரும்பும் வாழ்க்கை நடைமுறைகளை நாம் பின்பற்ற முயலுகையில் அல்லாஹ'வுடைய அருளும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது. ,

ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தமது குழந்தை வளர்ப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். குறிப்பாக குழந்தைகளின் ஆடை விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.