ஜனாஸா அறிவித்தலா...?
1990 ஆம் ஆண்டு புலிகள் யாழ்ப்பாண முஸ்லிம்களை அவர்களது தாயகப் பிரதேசத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றியபின் யாழ் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட மிகப்பெரும் சவால்தான் சமூகச் சிதைவாகும். இந்த சமூகச் சிதைவு காரணமாக எம்மவர் குறித்த பல விபரங்களை அறியாமலேயே எம்மவர் காலம் கடத்தும் நிலை நீடித்துச் செல்கிறது.
உதாரணமாக எமது யாழ் முஸ்லிம் சமூகத்திலில் ஒரு ஜனாஸா சம்பவம் இடம்பெறுமாயின் அதனை எமது சமூகத்திலுள்ள பலர் அறியாத நிலையே காணப்படுகிறது. இச்செயற்பாடு நீடித்துச் செல்லுமாயின் அதன் விளைவுகள் மிகப்பாரதூரமானதாககூட அமையலாம்.
எனவே இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் ஒரு இலவச திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
அதாவது யாழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வபாத்தாகும் வேளை எம்மவர்கள் அதனை எமக்கு அறிவித்தால் நாம் அந்த ஜனாஸா குறித்த அறிவிப்பை இப்பகுதியில் பதிவிட தயாராகவுள்ளோம்.
வபாத்தானவர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது உறவினராகவோ இல்லையேல் நீங்கள் அறிந்தவராககூட இருக்கலாம். அதுபற்றிய விபரங்களையும், நாம் எவருடன் தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்ற தொலைபேசி இலக்கத்தையும் உடனடியாக எமது ( jaffnamuslim1990@yahoo.com அல்லது jaffnamuslim@yahoo.com) என்ற ஈமெயில் முகவரிக்கு அல்லது பேஸ்புக் மூலம் அறியப்படுத்துவீர்களாயின் நாம் இப்பணியை உடனடியாக செயற்படுத்தக்கூடியதாக அமையும்.
நன்றி........!
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் யாழ் முஸ்லிம் வலைத்தளம்



Post a Comment