Header Ads



சகலரும் சம உரிமையோடு வாழவேண்டும் தமிழில் உரையாற்றினார் ஜனாதிபதி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று வெள்ளிக்கிழமை தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

எமது நாட்டை சிறிய நாடு என்று நான் கூறியதும் இல்லை, நினைத்ததும் இல்லை எனக் கூறினார். எமது நாட்டை யாரால் சிறிய நாடு என்று கூறமுடியும் எமது நாட்டில் பெறுமதிமிக்க இயற்கை வளங்கள் உள்ளன திருகோணமலை துறைமுகம்இ சிகிரியா ஓவியம் என பல வளங்கள் எம் நாட்டினில் உள்ளன.

இதேவேளை ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே நீதி ஒரே தேசியக் கொடி இங்கு எல்லோரும் சம உரிமையோடு வாழவேண்டும் அவைதான் எமது தேவை என உரை நடுவே ஓரிரு வார்த்தைகள் ஜனாதிபதி தமிழில் கூறினார்.

No comments

Powered by Blogger.