Header Ads



பிரிட்டனில் இப்படியும் ஒரு பெண்

தூங்கும் நேரத்தை தவிர மீதமுள்ள 16 மணி நேரங்களிலும் நின்று கொண்டே தன் வாழ்க்கையை ஓட்டி வருகிறார் பிரிட்டனைச் சேர்ந்த 49 வயதாகும் பெண்மணி லிண்டா பர்கேஷ். சாப்பிடுவது  தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்ட அனைத்தும் நின்று கொண்டே செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் வயிற்றில் நடந்த அறுவை சிகிச்சை ஒன்றிற்குப் பிறகு இவரால் உட்கார முடியவில்லை. குனியவும் முடியவில்லை. லெய்செஸ்டர் ராயல் இன்பிர்மேரி மருத்துவமனையில் 2007 இல் அறுவைசிகிச்சை நடைபெற்றதால் அந்த மருத்துவமனையின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் உட்கார முடியாத காரணத்தினால் பணியாற்றி வந்த பல்கலைக்கழகமும் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

ஆபரேஷனுக்குப் பின்னர் தன்னுடைய வாழக்கையே நரகமாகி விட்டதாகவும் அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே நரம்புகளில் கோளாறு ஏற்பட்டிருப்பது போல் தான் உணர்ந்ததாகவும் அதை வெளிப்ப்டுத்திய பின்னரும் கூட மருத்துவர்கள் கண்டு கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். தற்போது கணவருடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்து வரும் அவர் வேறு வழியில்லாமல் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.