ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் காங்கிரஸை ஏமாற்றினாரா..??
ரவூப் ஹக்கீம் தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களை கொண்டிருந்த நிலையில் அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியும், ஒரு பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்ட்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் காங்கிரஸை ஏமாற்றியுள்ளதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமைச்சுப் பதவிகளைப் பெறாமல் ஆளும் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது என்ற முடிவில் ரவூப் ஹக்கீம் ஆரம்பத்தில் இருந்தபோதும் பின்னர் அக்கட்சி எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாக அவர் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவேண்டியேற்பட்டது.
அமைச்சுப் பதவிகளைப் பெறுவதிலும் முஸ்லிம் காங்கிரஸிற்குள் பெரும் போட்டி காணப்பட்டது. ஹஸன் அலி தவிர்ந்த சகலரும் தமக்கு அமைச்சு அல்லது பிரதியமைச்சுப் பதவி தரப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீமை வலியுறுத்தினர். இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸிற்குள் மற்றுமொரு பிளவு ஏற்படக்கூடிய சாத்தியம்கூட மேலோங்கியிருந்தது.
அவ்வாறான நிலையிலேயே இன்று திங்கட்கிழமை புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்த்த அமைச்சுப் பதவிகள் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவிலலை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமக்கு கூறிய வாக்குறுதிபடி அமைச்சுப் பதவிகளை வழங்கவில்லையெனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.


Post a Comment