யாழில் 12 மரண விசாரணை அதிகாரிகள் நியமனம் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிப்பு
யாழ்.மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த சங்கானை, பண்டத்தரிப்பு, நல்லூர், கோப்பாய், புங்குடுதீவு, நயினாதீவு, சண்டிலிப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிக்கு திடீர் மரணவிசாரணை அதிகாரிகள் நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.மோகன் சங்கானைக்கும், வீ.பாஸ்கரன் கரவெட்டிக்கும், ஜே.எஸ். ஸ்ரீநிவாசன் சண்டிலிப்பாய்க்கும், எம்.உதயசிறி நல்லூருக்கும், பீ.பூபாலசிங்கம் கோப்பாய்க்கும், திருமதி எம்.சசிகலா சாவகச்சேரிக்கும், திருமதி பீ.டி.நந்தலா பருத்தித்துறைக்கும், ஏ.என் பிறேம்குமார் புங்குடுதீவுக்கும், திருமதி ஆர்.தவமலர் கொடிகாமத்துக்கும், என்.தியாகராசா நயினாதீவுக்கும், எம்.சதீஸ்வரன் ஆனைக்கோட்டைக்கும், திருமதி வீ.பவானி பண்டத்தரிப்புக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு ஒரே தடவையில் இவ்வாறு மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், எந்தவொரு முஸ்லிமும் மரண விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படவிலலை. யாழில் தற்போது முஸ்லிம்கள் மீளக்குடியேறிவரும் நிலையில் மரண விசாரணை அதிகரி ஒருவர் முஸ்லிம் தரப்பிலிருந்தும் நியமிக்கப்ட வேண்டுமென பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment