றிஸானாவுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம் மரண தண்டணை ரத்துச் செய்யப்படுமா..?
(றிஸானாவின் குடும்பமும், அவர்களின் குடிசை வீடும்)
(கொழும்பில் இன்று 16-11-2010 நடைபெற்ற ஆர்ப்பாட்டம்)
எதிர்வரும் சில நாட்களில் றிஸானா நபீக்கின் மரண தண்டணை நிறைவேற்றப்படலாமென்ற அச்சம் பரவலாக மேலோங்கியுள்ள நிலையில் அவரை விடுவிக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவுதி தூதரகம் முன் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சகோதரி றிஸானாவின் விடுதலையை வலியுறுத்தி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
ஏராளமான பெண்கள் இன, மத பேதமின்றி இந்ந ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதுடன், அவர்கள் றிஸானாவை மரண தண்டணை உடனடியாக ரத்துச் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குரல் எழுப்பியுள்ளனர்.


Post a Comment