Header Ads



இனவாத பிக்குகளுக்கு ஆதரவாக சஜித்..?


கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையை சஜித் பிரேமதாச கண்டித்துள்ளார்.


அத்துடன், ஜனாதிபதி அனுரகுமார  இதில் நேரடியாகத் தலையிட்டு, பிக்குகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிக்குகள் கொண்டு வந்த புத்தர் சிலையைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கட்டமைப்பை பொலிஸார் அகற்றியதாகவும், இதனால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்தச் சம்பவத்தின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களை எதிர்க்கட்சித் தலைவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.


மகா சங்கத்தினருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணுமாறும், அதேவேளையில் பௌத்த துறவற அடையாளத்திற்கு உரிய மரியாதையை உறுதிப்படுத்துமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


பிக்குகளுக்குத் துன்புறுத்தலையோ அல்லது மன உளைச்சலையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தையும் பொலிஸாரையும் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.