ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த கடற்கரையாக அறுகம்பே தெரிவு
இலங்கையின் அறுகம்பே கடற்கரை, ஆசியாவின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் சிறந்த கடற்கரையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான “Conde Nast Traveler Readers’ Choice Awards” கருத்துக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக, அலைச்சறுக்கு விளையாட்டுக்காக உலகளவில் அறுகம்பே கடற்கரை புகழ்பெற்றுள்ளமை, ஆசியாவின் முன்னணி கடற்கரைகளில் ஒன்றாக அது தெரிவு செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment