உலக அமைதி: இலங்கைக்கு 67ஆவது இடம்
2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்று, 14 இடங்கள் நகர்ந்து உலகளவில் 67ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளாவிய அமைதிக் குறியீட்டில் ஐஸ்லாந்து முதலிடத்தைப் பெற்று, நியூசிலாந்து 2 ம் இடத்தையும், சுவிட்சர்லாந்து 3 ம் இடத்தையும் பெற்றுள்ளன. 163 நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட உலக அமைதிக் குறியீட்டில் ரஷ்யா கடைசி இடத்தைப் பெற்று, சூடான் 162ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
உலகஅமைதிக் குறியீட்டில் தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டான் முதலிடத்தைப் பிடித்து, அதன் 2 வது இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் குறைந்த அமைதியைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்தான் பதிவாகி, இந்தியா அந்த பிராந்தியத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Post a Comment