Header Ads



வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் - 4 பாடசாலைகள் மூடல்


தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்ஃபுளுவென்சா (Influenza) போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திலுள்ள நான்கு முக்கிய பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் குறித்து தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிசாக ஹெட்டிகொட தெரிவிக்கையில்,


பாடசாலை மாணவர்களிடையே இந்த வைரஸ் தொற்று மேலதிகமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.