(Button Battery) குறித்து விழிப்பாக இருக்கவும் . சிறுவன் உயிரிழப்பு
வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்த நேஹான் தசங்க டி சில்வா (வயது 7) என்ற சிறுவனே உயிரிழந்தவனாவான். தலாரம்ப இந்தசார வித்தியாலயத்தில் தரம் 3-இல் கல்வி கற்று வந்தான். மரண விசாரணையில் சாட்சியமளித்த சிறுவனின் தந்தை,
எனது மகன் சிறிய மின்கலத்தை எடுத்துத் தெரியாமல் விழுங்கிவிட்டான். வயிற்றுப் பகுதியை (X-Ray) எடுத்தோம். அறுவை சிகிச்சை மூலம் வயிற்றிலிருந்த மின்கலம் அகற்றப்பட்டது. 2 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினான். முதுகு, வயிறு, தலைவலி இருப்பதாகக் கூறினான். அன்று அவன் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். காலை 8:30 மணியளவில் பாடசாலையிலிருந்து அழைப்பு வந்தது மகன் ரத்தம் வாந்தி எடுப்பதாகத் தெரிவித்தனர்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அவன் நினைவு திரும்பவில்லை. மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை மகன் உயிரிழந்தான்.

Post a Comment