ஹமாஸ் அமைப்பின் தலைவர் 4 ஆவது மகனையும் இழந்தார்
அபூ ஷுஹதா (ஷஹீத்களின் தந்தை)
ஹமாஸ் அமைப்பின் இராஜதந்திரக் குழுத் தலைவரும் பலஸ்தீன் காஸாவின் அதிபருமான கலீல் அல்-ஹய்யாவின் மகன்களில் நான்காமவர்,
நேற்று காஸா நகரில் நடத்தப்பட்ட சியோனிச ட்ரோன் தாக்குதலில் வீரமரணம் (ஷஹாதத்) அடைந்தார்.
டிரம்ப் பெருமையாகப் பீற்றிக்கொள்ளும் போர்நிறுத்தம் ஃபலஸ்தீன் காஸாவில் அமலில் இருக்கும்போதே இந்தப் படுகொலை அரங்கேறியுள்ளது.
உஸாமா, ஹம்ஸா, ஹமாம் ஆகிய தனது சகோதரர்களுடன் தற்போது நான்காமவராக **அஸ்ஸாமும்** நேற்று முதல் இன்ஷா அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் சிறகடித்து மகிழ்கிறார். முன்னதாக, கலீல் அல்-ஹய்யாவை தோஹாவில் வைத்துப் படுகொலை செய்ய முயன்றபோதுதான் அவரது மகன் ஹமாம் வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
DrCK Abdulla

Post a Comment