பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பௌசர்
பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பாரூக் முகமது பவுசரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி என்பவர் நியமிக்கப்பட உள்ளார்.
பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு கூடிய போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Post a Comment