சடலத்தைப் பொறுப்பேற்பதில் 2 பெண்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இவர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணத்தின் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
எனினும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதல் மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து சென்ற இவர், மீகொட பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.
இவரது மரண விசாரணை நடைபெறவிருந்த நிலையில், உயிரிழந்த நபரின் சட்டப்பூர்வமான முதல் மனைவி திருமணச் சான்றிதழுடன் வருகை தந்து சடலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினார்.
இந்தச் சிக்கலான நிலையைத் தணிப்பதற்கு ஹோமாகம திடீர் மரண விசாரணை அதிகாரி தலையிட்டார்.
இரண்டாவது பெண்ணுடன் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும், சட்டப்பூர்வமாக முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்திருப்பது செல்லுபடியாகாது.
எனவே, சட்டத்தின்படி சடலத்தைப் பொறுப்பேற்க முதல் மனைவிக்கே முன்னுரிமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment