பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசு
பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அஹமதுவுக்கு 2.5 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது
அவுஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார்.
துப்பாக்கிச் சூட்டை சமாளித்து பல உயிர்களைக் காப்பாற்றிய அஹமதுவுக்கு சமூக நன்கொடைகளாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது. கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் அஹமது, தனது மருத்துவமனை படுக்கையிலிருந்தே காசோலையைப் பெற்றார்.

Post a Comment