Header Ads



40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் - அமைச்சர் பிமல்


ரணில் மீது சுமத்தப்பட்டுள்ள மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரது சமீபத்திய கைதுக்குப் பின்னால் உள்ள குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்ற வாதங்கள் உள்ளன, அது உண்மைதான்.  1977 இல்  தேர்தலுக்குப் பிந்தைய பாரிய வன்முறைக்கு ரணிலும் ஜே.ஆரும் பொறுப்பாளிகள்,  யாழ்ப்பாண நூலகம் எரிப்பு, ஜூலை 1983 கலவரம் போது அமைச்சரவையில் ரணில்  வகித்த பங்கிற்கு அவர் பொறுப்பு. அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். படலந்த சித்திரவதை கூடம் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார், இதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.  2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடியில் ரணில் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் கைது செய்யப்படவில்லை. எனவே, 40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார், அங்கு விசாரணை அதிகாரிகள் தங்கள் கடமைகளை நேர்மையுடனும் தடையின்றியும் செய்ய முடியும்.

- அமைச்சர் பிமல் ரத்நாயக்க -

No comments

Powered by Blogger.