20 மணத் தம்பதிகளுக்கு திருமணம் முடித்து வைக்கும் வைபவம்
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் உயர்ஸ்தானிகர் காலித் நாசர் அல் அமரி ரிசாட் பதியுதீன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் திருமணத் தம்பதிகளுக்கான விசேட மார்க்கச் சொற்பொழிவினை கலாநிதி அஷ்ஷெய்க் எம். எல். எம். முபாரக் மதனி, விசேட துஆப் பிரார்த்தனை அல்ஹாபிழ் ரியாஸ் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இதன் போது தலா ஒவ்வொரு திருமணத் தம்பதிகளுக்கும் திருணமத்திற்கான செலவுகள் போக, மேலதிமாக திருமணப் பரிசாக ஒவ்வொ தம்பதிகளுக்கும் மூன்று இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.
மேலும் மேலதிகமாக கொழும்பு பாய் சங்க வர்த்தகப் பிரமுகர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா விகிதம் அன்பளிப்புத் தொகையும். தொழிலதிர் டி. எல். எம். நவாஸ் அவர்கள் ஒவ்வொரு மணத் தம்பதிகளுக்கு தலா அன்பளிப்புத் தொகையும், மற்றும் ரிசாட் பதியுதீனின் பாரியார் மற்றும் இன்னும் பல பிரமுகர்களுடைய அன்பளிப்புக்கள் என திருமணப் பரிசில்களாக வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இக்பால் அலி

Post a Comment