இளைஞர் முன்னேற்ற வேலைத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்
இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இங்கு, விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஆகியவற்றின் நிறுவன ரீதியிலான முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், அந்த நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களை திறம்படவும், வினைத்திறனுடனும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டுக்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஆண்டு இறுதிக்குள் முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், எதிர்பார்த்த பௌதிக மற்றும் நிதி இலக்குகளை அடைய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Post a Comment