கத்தார் பிரதமரின் வீட்டில், நீண்ட காலமாக பணியாற்றிய இலங்கைப் பெண் காலமானார்
கத்தார் பிரதமரின் வீட்டில், மிக நீண்ட காலமாக பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த, சகோதரரி ஸமத் சித்தி ரைஹானி கத்தாரில் 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவர் கொழும்பு - கொம்பனித் தெரு பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கத்தாரில் ஷேக் ஜாஸிம் முஹம்மத் ஹமத் அல் தானி அவர்களிடம் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்த சகோதரரி ஸமத் சித்தி ரைஹானி அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 16-07-2025 புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகையுடன் (மஃரிப் தொழுகைக்கான நேரம் மாலை 6:27) கட்டார் அபூஹமூர் மையவாடியில் இடம்பெறும்.
மஃரிப் தொழுகைக்கு அபூஹமூர் மஸ்ஜிதிற்கு சமூகமளித்து, இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து பிரார்த்திப்பதன் மூலம் இரண்டு கீராத் நன்மைகளைக் பெற்றுக்கொள்வோமாக.

Post a Comment