Header Ads



முதலாவது பயணத்தை ஆரம்பித்த புதிய விமானம்


ஸ்ரீலங்கன் விமான சேவையால் வாங்கப்பட்ட எயார் பஸ் A330-200 விமானம் இன்று (21) மாலைதீவில் உள்ள மாலே சர்வதேச விமான நிலையத்திற்கு தனது முதல் விமானப் பயணத்தை முன்னெடுத்திருந்தது. 


கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1.48 மணிக்கு விமானம் புறப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் நிறுவன தொடர்பு தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார். 


இந்த விமானம் இன்று மாலே சர்வதேச விமான நிலையத்திலும் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. 


கடந்த 4ஆம் திகதி பிரான்ஸிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த விமானத்தின் பதிவு உட்பட பல முக்கியமான சர்வதேச சம்பிரதாயங்களை முடித்த பின்னர், விமானம் அதன் முதல் விமான பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலே நோக்கி புறப்பட்டது.

No comments

Powered by Blogger.