ட்ரம்ப் நினைத்தால் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம், போரை எளிதாக நிறுத்த முடியும் - ஈரான்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித் ஃபராஹானி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இஸ்ரேல் - ஈரான் போரை எளிதாக நிறுத்த முடியும். ஈரான் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் வரை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது.
டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலின் வான்வழி குண்டுவீச்சுகளை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும்.” என்று கூறினார்.
Post a Comment