Header Ads



மனிதர்கள் இதுவரை பார்த்திராத, புதிய நிறம் கண்டுபிடிப்பு

 


மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 


இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 


கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகள் சிலரின் கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி, கண்களுக்கு பின் உள்ள 'கோன்' எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த ஒளியை பார்க்க முடியும். 


இயற்கையில் இப்படியான ஒளியை பார்க்கவே முடியாது. லேசர் உதவி மூலம் இந்த ஒளியை பார்த்தவர்கள், நீலம்-பச்சை கலந்த நிறத்தில் அந்த ஒளி இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் வழக்கமான நீலம் பச்சை நிறத்தை போல் அல்லாமல் இது வித்தியாசமாக இருந்திருக்கிறது என கூறியிருக்கிறார்கள். மனிதர்கள் பார்க்காத நிறத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் மூளை அதை எப்படி புரிந்துக்கொள்ளும் என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது. இதற்கு நாங்கள் ஓலோ (olo) என பெயரிட்டிருக்கிறோம். 


இந்த நிறம் தனிச்சிறப்புமிக்கது. இதனை மொபைல் டிஸ்பிளேவில், கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்க்க முடியாது. லேசர் மூலம் மட்முமே உணர முடியும். மனித கண்கள் ஒரு பொருளை பார்த்து அது இந்த நிறத்தில்தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க 


L (Long wavelength) - சிவப்பு 


M (Medium wavelength) - பச்சை 


S (Short wavelength) - நீலம் 


எனும் அமைப்பை பயன்படுத்துகிறது. சூரிய ஒளியோ, அல்லது லைட் வெளிச்சமோ ஒரு பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும்போதுதான் அது எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் ஆய்வில் கண்ணின் M அமைப்பை மட்டுமே செயல்படுத்தினோம். இதன் மூலம் புதிய ஒளி உருவாகியுள்ளது.

No comments

Powered by Blogger.