Header Ads



கொழும்பில் சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் படகு சேவை


 கொழும்பு நகரின் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பயணிகள் படகு சேவை ஒன்று நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


பத்தரமுல்லை தியன உயன மற்றும் அக்கொன-ஹினடிகும்புரவில் இருந்து வெள்ளவத்தை வரை இந்த பயணிகள் படகு சேவை நடத்தப்பட உள்ளது. படகுகள் சூரிய மின் கலங்கள் மூலம் இயங்குவது சிறப்பம்சமாகும்.


எதிர்காலத்தில் நாட்டில் ஆறுகள் ஊடாக மேலும் சில படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.


சூரிய மின்சக்தியில் இயங்குவதன் காரணமாக படகு சேவைக்கு எரிபொருள் செலவாகாது என்பதுடன் ஒலி மாசுப்படுவதும் நடக்காது எனவும் அமைச்சு கூறியுள்ளது.


தினமும் அலுவலக நேரத்தில் படகு சேவைகள் நடத்தப்படும் என்பதுடன் ஒரு படகில் 8 பேர் பயணம் செய்ய முடியும்.


பத்தரமுல்லை மற்றும் அதன் அருகில் இருக்கும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், சர்வதேச பாடசாலைகள், திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி 176, 138 மற்றும் 122 பேருந்து வழித்தடங்கல்,வெள்ளவத்தை தொடருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த படகு சேவை மூலம் இலகுவாக செல்ல முடியும் எனவும் நகர அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.



No comments

Powered by Blogger.