Header Ads



மின்சாரத் தடை, நாசகார வேலையா..?


நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர் மின்சார மீள் இணைப்பு பணிகளை வேண்டும் என்றே இழுத்தடிப்பு செய்வதாக மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார். 

எனினும், மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதுடன் 400 மெகா வோட் மின்சாரம் மீள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கொழும்பில் பல பகுதிகளுக்கும் அநுராதபுரம், ஹபரணை, லக்சபான - அதுருகிரிய மற்றும் கொத்மலை - பியகம ஆகிய மின் விநியோக பாதைகளுக்கான மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.