Header Ads



தேசிய மீலாதுன் நபி விழா - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கும் வைபவம்


(அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் கலாச்சாரத் திணைக்களம் ஏற்பாடு செய்த   தேசிய மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு நாடாள ரீதியில் பாடசாலை மற்றும்  முஸ்லிம் கலைஞா்களுக்கிடையே நடாத்திய மீலாதுன் நபி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணப்பரிசிழ்களும்  மற்றும்  சான்றிதழ்களும்  வழங்கும் வைபவம் முஸ்லிம் சமப பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளா்  இப்ராஹிம் அண்ஸாா் தலைமையில்  கொழும்பு ஸாஹிரா கல்லுாாியின் கபூர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 26 நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஊவா மாகாண ஆளுணா் ஏ.ஜே.எம். முஸம்மில் , கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பிணா் காதா் மஸ்தான், மற்றும்  பிரதம மந்திரியின் இணைப்பாளா் பர்சான்,  பிரதம மந்திரியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பாளா்  கலாநிதி ஹசன் மௌலானா  ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளா்  அஷ்ஷேக் அர்க்கம் நுாா் அமீத் மற்றும் அதிதிகள் பலா் கலந்து கொண்டனா். அத்துடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளது பெற்றோா்களும் கலாச்சாரத்  திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனா்.

 இந் நிகழ்வில் பேச்சு, குர்ஆண் மனனம், கவிதை, கட்டுரைப் பேச்சு போட்டிகள் என மும் மொழிகளிலும் நடைபெற்றது.  முதலாம் , இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவா்களையே கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவா்களுக்கு  முறையே 10ஆயிரம், 7500 ரூபா .5ஆயிரம் ருபா பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.