Header Ads



எமது காலத்து அரசர், மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு - இந்துராகாரே தம்மரதன தேரர்


மிகப் பெரும் தூபியான சந்தஹிரு சேயா அமைக்கப்பட்டுள்ளமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த மிகப் பெரிய பிறந்தநாள் பரிசு என இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் மன்னர்களின் வம்சத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை அண்மைக்கால வரலாற்றில் பெரும் தூபியான சந்தஹிரு சேயாவை அமைக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நாட்டில் எந்த அரசனுக்கும் இப்படி ஒரு ஆணை கிடைத்ததில்லை. இவ்வாறான பிறந்தநாள் பரிசுகள் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வின்போதே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், சிங்கள துட்டகைமுனு, தமிழ் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டார்.

எல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னருக்கும் இடையே நடந்த போரை வரையறுக்க முடியாது. துட்டகைமுனு மன்னன் தமிழர் படைக்கு எதிராகப் போரிடவில்லை, படையெடுத்து வந்த சோழப் படைக்கு எதிராகப் போரிட்டான். எனவே, சோழப் பேரரசின் படையெடுப்பாளர் மீது மன்னர் துட்டகைமுனு நடவடிக்கை எடுத்தார். எனவே யுத்தம் என்பது பயங்கரவாதத்திற்கு அறிந்த மொழியில் பதிலளிப்பதே ஆகும். யுத்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையே நடப்பதாகும். அதனால் இலங்கையில் யுத்தம் நடக்கவில்லை.

ஐரோப்பிய முகவர்கள் மற்றும் உள்ளூர் முகவர்களின் சலசலப்பை இறுதி நொடியில் நிறுத்துவதற்கு ஹெலிகொப்டரில் எம்பிலிபிட்டியவிற்கு சென்று முயற்சித்தார். அப்போது படையெடுப்பாளருக்கு எதிராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்சவே எமது காலத்து அரசர். எமக்கு அதுவே முக்கியமானது.

உருளைக்கிழங்கு, வெங்காய அரசியல் அல்ல. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் குறைவடையும், அதிகரிக்கும். ஆனால், இந்நாட்டின் சுதந்திரம் என்ற விடயத்தை ஒருவர் தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் இனப்படுகொலை என்று வரையறுத்தார். அது அப்படியல்ல, அது ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டிருந்தால் முதலில் வெள்ளவத்தை மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். முதலில் கோவில்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே இன்று இந்த யுத்தத்தினால் பயனடைவது யார், சிங்களவர்களா இல்லை. சாதாரண மக்களா? அதுவும் இல்லை. வர்த்தகர்கள் அனைவருமே ஆவர்.

எனவே, உருளைக்கிழங்கைக் குறைக்கவோ, எரிவாயுவை அதிகரிக்கவோ இந்நாட்டு மக்கள் கேட்கவில்லை. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அதனால்தான் நாட்டு மக்கள் இன்னும் உங்களை நேசிக்கிறார்கள்.

எனவே, இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில் மன்னர்களின் வம்சத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை அண்மைக்கால வரலாற்றில் பெரும் தூபியான சந்தஹிரு சேயாவை அமைக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நாட்டில் எந்த அரசனுக்கும் இப்படி ஒரு ஆணை கிடைத்ததில்லை. இவ்வாறான பிறந்தநாள் பரிசுகள் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Comedy thanga ela 2021 waalum ariyawahai in palaya wilangu.

    ReplyDelete
  2. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாக இருக்கும் உப வேந்தர் பதவிக்கு மிக விரைவில் நியமிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.