Header Ads



சுனில் பெரேரா காலமானார்


இலங்கையின் இசை துறையின் பிரபலமான இசை குழுவான ஜிப்ஸிஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேரா காலமாகியுள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி கொழும்பு தனியார் வைத்தியசாலையில் 3 வாரங்கள் சிகிச்சை பெற்ற சுனில் பெரேரான, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் குணமடைந்து வீடு திரும்பினா்.

தான் நன்கு குணமடைந்து வருவதாக கூறி இணையத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனினும அவரது நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.