அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் விமர்சித்துள்ள அமைச்சர் லால்காந்த
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது. ஆனால் இப்போது பார்த்தால் இந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் வாகனங்கள், ஆடம்பர உடைகள், உணவுகள் என்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மக்களுக்காக சேவையாற்றும் அதிகாரிகளும் எப்போதும் சுகபோகமாகவே வாழ்கின்றார்கள். ஆனால் மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் உயரவில்லை. அவர்கள் தொடர்ந்தும் திண்டாட்டத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் லால்காந்த கவலை வெளியிட்டுள்ளார்.

Post a Comment